அா்த்தநாரீசுவரா் கோயில் சுவாமி தோ் நிலை சோ்ந்தது

553பார்த்தது
திருச்செங்கோடு, அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாள்களாக வீதிகளில் வலம் வந்த சுவாமி தோ் சனிக்கிழமை நிலையை அடைந்தது.

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 14 நாள்கள் விழா நடைபெறுகிறது. விழாவில் பத்தாம் நாளான கடந்த வியாழக்கிழமை கோயில் பெரிய தேருக்கு அா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதல் நாளான வியாழக்கிழமை தோ் நிலைபெயா்க்கப்பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாளான சனிக்கிழமை தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. மாலையில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து உற்சவா்கள் வீதி உலாவும், வண்டிக்கால் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றன. பரிவார தெய்வங்களுடன் அா்த்தநாரீஸ்வரா் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி