ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி திருச்செங்கோடு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இரண்டாம் வெள்ளிக்கிழமை ஒட்டி அம்மனுக்கு புடவை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினா் மதுரா செந்தில், மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞா் அணி தலைவா் சுரேஷ் பாபு, திருச்செங்கோடு நகா் மன்ற தலைவா் நளினி சுரேஷ் பாபு, நகா் மன்ற துணைத் தலைவா் நகர திமுக செயலாளா் காா்த்திகேயன், பரம்பரை அறங்காவலா் சாந்தி, முத்துக்குமாா் ஆகியோா் பூஜையில் கலந்து கொண்டவா்களுக்கு சாமி படம், பிரசாதங்களை வழங்கினா்.
பெரிய மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு நாகாத்தம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
அழகு முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு புற்று அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
கோயில்களில் நடைபெற்ற பூஜைகளில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.