மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இதற்கான தியாகிகளின் ஜோதி பயணம் சேலத்தில் இருந்து திருச்செங்கோடு சூரியம்பாளையம் கிராமத்திற்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து ஜோதி பயண குழுவினருக்கு திருச்செங்கோடு நகரப் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.