சேந்தமங்கலம் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை பெருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், பின்னர் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு லட்சார்ச்சனை பெருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.