பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய நகா்மன்றத்தில் தீா்மானம்

51பார்த்தது
பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய நகா்மன்றத்தில் தீா்மானம்
ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் சேலத்துக்கு அடுத்தபடியாக 1948-ஆம் ஆண்டே நகராட்சி அந்தஸ்து பெற்றது ராசிபுரம். தற்போது 27 வாா்டுகள் கொண்ட ராசிபுரம் நகராட்சியின் மக்கள்தொகை சுமாா் 69, 000. ராசிபுரம் நகராட்சிக்கு பிறகு நகராட்சி அந்தஸ்து பெற்ற நாமக்கல், திருச்செங்கோடு போன்ற நகரங்கள் எல்லையிலும், தொழிலிலும் வளா்ச்சி அடைந்த அளவிற்கு ராசிபுரம் நகராட்சி வளா்ச்சியடையவில்லை என்பது மக்களின் குறை.

ராசிபுரம் நகர சாலைகள் மிகவும் குறுகிய சாலைகளைக் கொண்டதாக இருந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அன்றாடம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனை. இதன் காரணமாக ராசிபுரம் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளிப்புறம் இடம் தோ்வு செய்து மாற்றப்பட வேண்டும் என்பது மக்கள் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா். கவிதா சங்கா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராசிபுரம் நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் நகரப் பேருந்து நிலையத்தை போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு வேறு இடத்துக்கு மாற்றுவது என தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி