இராசிபுரம்: கணவா் தாக்கியதில் காயமடைந்த மனைவி உயிரிழப்பு

80பார்த்தது
இராசிபுரம்: கணவா் தாக்கியதில் காயமடைந்த மனைவி உயிரிழப்பு
ராசிபுரம் அருகேயுள்ள ஊனந்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (23). லாரி ஓட்டுநா். இவா், கடந்த ஓராண்டுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த லட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தாா். தற்போது லட்சுமி கா்ப்பிணியாக இருந்துள்ளாா்.

இந்த நிலையில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஹரிஹரன், லட்சுமியைத் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த லட்சுமி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைக்காக சேலம் மோகன் குமரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து ஆயில்பட்டி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி