நாமகிரிப்பேட்டை: அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்

78பார்த்தது
நாமகிரிப்பேட்டை: அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்
நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற ஆதார் பதிவு சிறப்பு முகாமை, பொன்னுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு, நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு செல்லும் விதமாக, பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நேற்று நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்எல்ஏ. , தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், வட்டார அட்மா திட்ட குழு தலைவர் ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மேலாண்மை குழு நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி