போதை மலைக்கு தார் சாலை விரைந்து தொடங்க கோரிக்கை

56பார்த்தது
போதை மலைக்கு தார் சாலை விரைந்து தொடங்க கோரிக்கை
போதை மலைக்கு தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவின் மத்திய அரசு திட்டங்கள் துறை மாநில துணைத்தலைவர் கலெக்டர் உமாவிடம் கோரிக்கையான அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வெண்ணந்தூர் உட்பட்ட கோதை மலைக்கு கடந்த 75 ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லை.

இங்கு 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போதை மலைக்கு தார் சாலை அமைக்க சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு 118 கோடியும் மாநில அரசு 22 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதனை அடுத்து தார் சாலை அமைக்கும் ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்காமல் உள்ளன. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணியை விரைந்து தொடங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி