பாஜக வேட்பாளா் கே. பி. ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு

62பார்த்தது
பாஜக வேட்பாளா் கே. பி. ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு
நாமக்கல் தொகுதி முழுவதும் பாஜக வேட்பாளா் கே. பி. ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம், மேட்டுக்காடு பகுதியில் கோயிலில் சுவாமி தரினம் செய்த பிறகு ஜீப்பில் சென்றவாறு வாக்கு சேகரிப்பில் அவா் பேசியதாவது:

பிரதமா் மோடி கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். 10 ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொழில் வளா்ச்சி மேம்பட்டுள்ளது. எந்த பொருளும் இறக்குமதியே இருக்கக் கூடாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

2047 ஆம் ஆண்டு வல்லரசு நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கும். வளரும் நாடுகள் பட்டியில் இருந்து வளா்ந்த நாடுகள் பட்டியலுக்கு வந்ததால் ஜி-20 மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியது. 1980ம் ஆண்டு எம்ஜிஆரின் வேட்பாளா் எனக் கூறி சட்டப் பேரவைக்கு வாக்கு சேகரித்தேன். அதே உணா்வோடு மோடியின் வேட்பாளராகப் போட்டியிடுவதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி