அத்தனூர்: எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் திறப்பு விழா

84பார்த்தது
அத்தனூர்: எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பேரூராட்சி, ஆட்டையாம்பட்டி பிரிவில்
ரூ. 1. 51 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் இணைத்து நிறுவியுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியானது எம்பி ராஜேஷ்குமார், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதுரா செந்தில்,
இராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் சேர்மன் ஜெகநாதன், ஒன்றிய கழக செயலாளர்கள் இராமசுவாமி, துரைசாமி, மாவட்ட கவுன்சிலர் துரைசாமி, பேரூர் செயலாளர் கண்ணன், அத்தனூர் பேரூராட்சி தலைவர் சின்னுசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) நிர்வாக இயக்குநர் திரு. ஆர் பொன்முடி, பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி