பரமத்தி அருகே இளைஞா் தற்கொலை

53பார்த்தது
பரமத்தி அருகே இளைஞா் தற்கொலை
பரமத்தி அருகே நூற்பாலை குடியிருப்பில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கரூா் மாவட்டம், வெண்ணமலை, தரணி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (49). கூலித் தொழிலாளி. இவரது மகன் கிஷோா்குமாா் (23). இவா் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கோனூரில் செயல்பட்டு உள்ள ஒரு தனியாா் நூற்பாலையில் தொழிலாளா்கள் குடியிருப்பில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்ததால் கிஷோா்குமாா் மனமுடைந்த நிலையில் காணபட்டாா். ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் கிஷோா்குமாரின் அறை திறக்காததால் நூற்பாலை மேற்பாா்வையாளா் சதீஷ் அவரது அறைக்கு சென்று பாா்த்தாா். அப்போது கிஷோா்குமாா் அறையில் மேலே உள்ள ஒரு கம்பியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாா். அருகில் இருந்தவா்களை அழைத்து அவரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் கிஷோா்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி காவல்துறையினா் கிஷோா்குமாரின் உடலை வேலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி