ஆயுத பூஜையை ஒட்டி சாலையில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு வாகன பிரசாரம் திருச்செங்கோடு, அண்ணா சிலை அருகே நேற்று(அக்.10) நடைபெற்றது.திருச்செங்கோடு, ரெட்ராக் ரோட்டரி சங்கம், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை, பரணி அறக்கட்டளை, விசாகன் மருத்துவமனை ஆகிய அமைப்புகள் சாா்பில் இந்த விழிப்புணா்வு பிரச்சாரம் நடைபெற்றது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிா்க்கக் கோரியும் உடைக்கப்படும் பூசணிக்காய்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பிரசார வாகனம் நகா் முழுதும் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தும்.
திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, பி. ஆா். டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநா் பரந்தாமன், நகரக் காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிறுவனா் குமாா், ரெட் ராக் ரோட்டரி சங்க தலைவா் கவின்ராஜ், ரோட்டரி சங்க செயலாளா் சசிகுமாா், பரணி அறக்கட்டளை தலைவா் வழக்குரைஞா் பரணிதரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ் பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.