நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜ சுவாமி திருக்கோவிலில், ஆடி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்