நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் ஆலயத்தில்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மயில் வாகனத்தில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.