பரமத்திவேலூர்: அம்மன் கோயில்களில் திருவிழா

564பார்த்தது
பரமத்திவேலூர்: அம்மன் கோயில்களில் திருவிழா
பரமத்தி வேலூா் வட்டம் கு. அய்யம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 31-ஆம் தேதி பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீா்த்தக் குடங்களுடன் கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. திங்கள்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை குண்டம் இறங்கும் விழாவும் நடைபெற்றன.

புதன்கிழமை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கு. அய்யம்பாளையம் பகவதியம்மன் கோயில் விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

இதேபோல, வேலூா் பகவதியம்மன் கோயிலில் தோ் மற்றும் குண்டம் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை திருத்தோ் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தேரை ஊா்வலமாக கொண்டு சென்றனா். புதன்கிழமை மாலை கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பகவதியம்மனை தரிசனம் செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி