ஆடி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள 120 படிகளுக்கு படி பூஜை நடைபெற்றது. முன்னதாக120 படிகளுக்கும் வெற்றிலை, பாக்கு, பூக்கள், தேங்காய் வைத்து முருகனின் பக்தி பாடல்கள் பாடி தீபாராதனை காண்பித்து ஒவ்வொரு படிக்கட்டுகளில் தேங்காய் உடைத்து முருகனை வழிபட்டு மலை ஏறிச் சென்றனர்.
தொடர்ந்து படி பூஜை நிறைவு பெற்றவுடன், மதியம் மூலவர் சன்னிதானத்தில் உள்ள முருகனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.