ப. வேலூர் அருகே வாழைத்தார் விலை உயர்வு
By Tamil Selvan 529பார்த்ததுபரமத்தி வேலூர் வாழைத்தார் ஏல சந்தையில் கோவில் விசேஷங்களால் வாழைத்தார் விலை உயர்வடைந்துள்ளது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 600 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், 500 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 400 ரூபாய்க்கும்; மொந்தன் காய், 10 ரூபாய்க்கும் விற்பனையானது.