இரு சக்கர வானங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் பலி

53பார்த்தது
இரு சக்கர வானங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் பலி
பரமத்தி வேலூா் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (46). இவா் சனிக்கிழமை பரமத்திக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குச் செல்ல இரு சக்கர வாகனத்தில் பரமத்தி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தாா். இதேபோல பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்த விவசாயி பழனியப்பன் (80) தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளாளபாளையத்தில் இருந்து பரமத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனங்கள் இரண்டும் மோதிக்கொண்டன. இதில் சிவகுமாா், பழனியப்பன் ஆகிய இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா். இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசாா் வழக்கு பதிவு செய்து பழனியப்பனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். படுகாயம் அடைந்த சிவகுமாா் நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி