தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு

81பார்த்தது
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு
பரமத்தி வேலூர் ஏல சந்தையில் தமிழ் புத்தாண்டுடை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ. 300-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ. 250-க்கும், ரஸ்தாலி ரூ. 250-க்கும், கற்பூரவள்ளி ரூ. 250-க்கும், மொந்தன் வாழைக்காய் ரூ. 5-க்கும், செவ்வாழை காய் ரூ. 6-க்கும் ஏலம் போனது.

அதையடுத்து தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ. 350-க்கும், பச்சைநாடான் ரூ. 250-க்கும், ரஸ்தாளி ரூ. 300-க்கும், கற்பூரவள்ளி தார் ரூ. 300-க்கும், மொந்தன் காய் ஒன்று ரூ. 5-க்கும், செவ்வாழை காய் ஒன்று ரூ. 7-க்கும் ஏலம் போனது.
Job Suitcase

Jobs near you