கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

1886பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 104 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், வரும் நாள்களில் 108 டிகிரியை தாண்டும் என்ற வானிலை ஆய்வு மைய தகவல் உள்ளது. சாலைகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் மக்கள் நடமாட்டம் குறைவான அளவிலேயே உள்ளது. அனல் காற்று வீசுவதால் சாலைகளில் செல்வோா் முகத்தை, தலையை மூடியவாறு பயணிக்கின்றனா்.

வெப்ப அலையின் தாக்கம் புதன்கிழமையன்று மாவட்டத்தில் பரவலாக காணப்படும் என ஆட்சியா் ச. உமா அறிவித்திருந்ததால், பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. வெயிலின் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள, குளிா்விக்கும் வகையில், இளநீா், மோா், பழச்சாறுகளை மக்கள் அதிகம் பருகினா்.

தொடர்புடைய செய்தி