டாஸ்மாக்கில் விற்கப்படும் `வீரன்’ மதுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

570பார்த்தது
டாஸ்மாக்கில் விற்கப்படும் `வீரன்’ மதுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
டாஸ்மாக் மூலம் ’வீரன்’ என்ற பெயரில் அண்மையில் மது அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதுவுக்கு வீரன் என பெயர் வைத்துள்ளது தங்கள் சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்துவதாகவும் அதை தடை செய்ய கோரியும் சமூகநீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன் கோரிக்கை வைத்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களான ஒண்டி வீரன், மாவீரன் பொல்லான், மதுரை வீரன் போன்றவர்களை இழிவுப்படுத்துவது போல உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி