நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி. க. வாகன பிரச்சாரம்

60பார்த்தது
நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய  அரசை வலியுறுத்தி தமிழகம்  முழுவதும் திராவிட கழகத்தின் மாணவரணி, இளைஞர் அணியினரர் சார்பில், டூவீலர் வாகன பேரணி கடந்த ஜூலை 11ல்  தாராபுரத்தில் தொடங்கி, சேலத்தில் ஜூலை 15ல்  முடிவடைய உள்ளது. இந்த வாகன பேரணியின் 3 வது நாளாக குமாரபாளையத்தில்  நாமக்கல் மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜானகிராமன், சிறப்பு அழைப்பாளராக தி. க. சொற்பொழிவாளர் தர்மபுரி யாழ் திலீபன் பங்கேற்று நீட் தேர்விற்கு  எதிராக பேசினர். இதில் பங்கேற்ற மாவட்ட தலைவர் குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார்,  வாகன பேரணி குழு ஒருங்கிணைப்பாளர் வீரமணி உள்ளிட்ட பலர்  நீட் தேர்வினை  ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய  அரசை  கண்டித்து பிரச்சாரம் செய்தனர். சி. பி. ஐ. நகர செயலர் கணேஷ்குமார், சி. பி. எம். நகர செயலர் சக்திவேல், ம. தி. மு. க. நகர செயலர் நீலகண்டன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட காப்பாளர் சாமிநாதன், தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் ஆறுமுகம், இலக்கியதளம் தலைவர் அன்பழகன், தி. க. நகர செயலர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி