தேர்வெழுத சென்ற சகோதரிகள் இருவர் படுகாயம்

71பார்த்தது
டூவீலர் மீது கார் மோதியதில்
தேர்வெழுத சென்ற சகோதரிகள் இருவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதியதில்

தேர்வெழுத சென்ற சகோதரிகள் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் வேதாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி, 20. இவர் தேர்வு எழுதுவதற்காக, நேற்று காலை 08: 00 மணியளவில்  குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் தனியார் கல்லூரிக்கு எக்ஸல் டூவீலரை இவரது மூத்த சகோதரி சவுமியா, 24, ஓட்ட, வைஷ்ணவி பின்னால் உட்கார்ந்து சென்றார். பல்லக்காபாளையம் பிரிவு சாலை சந்திப்பில் வாகனத்தை திருப்பும் போது, அவ்வழியே வந்த மாருதி கார் மோதியதில், சகோதரிகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்குக்கு காரணமான கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :