ஜமாபந்தியை துவக்கி வைத்த ஆர். டி. ஒ.

80பார்த்தது
குமாரபாளையத்தில் நடந்த ஜமா பந்தியை திருச்செங்கோடு ஆர். டி. ஒ. துவக்கி வைத்தார்.

 குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் சண்முகவேல் தலைமை வகித்தார். திருச்செங்கோடு ஆர். டி. ஒ. சுகந்தி பங்கேற்று, ஜமாபந்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராமப் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆர். டி. ஒ. வசம்  வழங்கினார்கள். மனுக்கள் தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொண்டு, தீர்வு காணப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆர். டி. ஒ. சுகந்தி அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் நில உரிமைகளில் உள்ள பெயர் திருத்தங்கள்,  முதியோர் ஓய்வூதியத் தொகை, இலவச வீட்டு மனை, பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள்  வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி