அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்

52பார்த்தது
அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்
குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா வழிகாட்டுதலில், துறை பேராசிரியை சரவணாதேவி தலைமையில்  நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வாசவி கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது:

ஆய்வு செய்தல் அவசியம். இதில்  தகவல் குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதனை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். இதற்கு கணினி உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு விஷயம் குறித்து மேலும் மேலும்   தகவல் சேகரிப்பது தான் ஆய்வு என்பது. புதிதாக மாறிக்கொண்டே இருக்கும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த ஆய்வின் மூலம் புதிய முடிவெடுக்க உதவியாக உள்ளது. இந்த ஆய்வை வணிக நிர்வாகவியல் மாணவர்கள் அடிப்படையாக மேற்கொள்ள வேண்டும். மனித வளம், நிதி மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது, என்னென்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேராசிரியர்கள் காயத்ரி, கல்யாணி, மோத்தி, பார்த்திபன், அன்புமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி