பெங்களூரு போலீசார் விரைவில் விசாரணை"

60பார்த்தது
, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்-படை அடுத்த செட்டியார்கடை பகுதியில், போலீசார் துப்பாக்-கியால் சுட்டு பிடித்தனர். இதில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜூமாந்தின், 37, பலியானார். குண்டு காயத்துடன் அசர் அலி, 28, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்டெய்னர் லாரியில் பதுங்கியிருந்த இர்பான், சவுக்கீன் கான், முகமுது இக்ரம், சபீர், முபாரக் ஆகிய, 5 பேரை கைது செய்து, சேலம் மத்-திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கேரளா, ஆந்திரா போலீசார், வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசா-ரணை நடத்தி சென்றனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆனந்-தாபுரம் என்ற பகுதியிலும், ஏ. டி. எம். , மையத்தில் பணம் கொள்-ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால், வெப்ப-டையில் பிடிபட்ட கொள்ளை கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்-கலாம் என, கருதிய பெங்களூரு போலீசார், நேற்று வெப்படை போலீசாரிடம் போனில் விசாரித்தனர். இன்னும் ஓரிரு நாளில், நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளதாக, வெப்படை போலீசார் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி