ஐயப்ப சேவா சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்...

71பார்த்தது
ஐயப்ப சேவா சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்...
குமாரபாளையத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. சபரிமலையில் சேவை செய்தவர்களுக்கு, சேவா சங்கம் சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம்கள், கல்வி உதவித்தொகை வழங்கியவர்களுக்கு, சேவைப்பணிகள் செய்ய பயிற்சி கொடுத்தவர்களுக்கு, சபரிமலையில் ஸ்ட்ரெட்சர் சேவை செய்து பல உயிர்களை காப்பற்றியவர்களுக்கு, சிறப்பு பஜனை நடத்தி, ஐயப்பன் திருவீதி உலா வர செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியவர்களுக்கு, ரத்ததானம், உடல்  உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு என பலதரப்பட்ட சேவைப்பணிகள் செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. புதியதாக மூன்று கிளைகள் துவக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்துடன் நாமக்கல் மாவட்டத்தில் 88 கிளைகள் துவக்கப்பட்டது. நிர்வாகிகள் மாவட்ட பொருளர் செங்கோட்டையன், மாவட்ட துணை தலைவர்கள் மணி, லோகநாதன், துணை செயலர்கள் முருகன், மோகன்ராஜ், மாதேஸ்வரன் உள்ளிட்ட தொண்டர் படை நிர்வாகிகள் பெரும்பாலோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்து 85கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுவரை சபரிமலையில் சேவை செய்ய 216 பேர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஜன. 10 மேலும் 70 பேர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

டேக்ஸ் :