குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25ம் ஆண்டு கார்கில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25ம் ஆண்டு கார்கில் வெற்றி விழா என். சி. சி. சார்பில், தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் கொண்டாடப்பட்டது. எஸ். ஐ. பழனிச்சாமி பங்கேற்று கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் ஆத்மா சாந்தி பெற மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார். கார்கில் போரில் உயிர் நீத்தஅவர்களுக்கு மவுன அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. கார்கில் போர் குறித்து எஸ். ஐ. , பழனிச்சாமி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கார்கில் போர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள், விநாடி வினா வைக்கபட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் உள்ளிட்ட பலரும் பெருமளவில் பங்கேற்றனர்.