சென்னை - பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை

8946பார்த்தது
சென்னை - பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜுன் 15) மின்தடை செய்யப்படுகிறது. தாம்பரம், பல்லாவரம், கிண்டி, கே.கே.நகர், மாதவரம், வியாசர்பாடி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கோடை வெயில் மற்றும் பள்ளி தேர்வுகள், விடுமுறை காலத்தில் மின்தடை ஏற்படாமல் இருந்த நிலையில், மீண்டும் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இனி பிற மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி