மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் - கச்சிகுடா ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் உள்ள கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.