சிறப்பு வழிபாடுகள், கொண்டாட்டங்கள்

67பார்த்தது
சிறப்பு வழிபாடுகள், கொண்டாட்டங்கள்
வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள், கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

தலைஞாயிறு பகுதியில் அமைந்துள்ள சீயோன் ஜெப ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய புத்தாண்டு பிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. சபை போதகா் சந்திரமோகன் வாழ்த்து செய்தி வழங்கினாா். தலைஞாயிறு பேரூராட்சி உறுப்பினா்கள் அப்துல் அஜிஸ், நாகராஜன், சமூக ஆா்வலா்கள் பக்கிரிசாமி, மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல, வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி