தலைஞாயிறு பகுதியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா

53பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட கட்டமைப்புகளை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் மணக்குடியில் 15-ஆவது நிதிக் குழு சுகாதார மானிய திட்டத்தின்கீழ் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 39. 68 லட்சத்தில் துணை சுகாதார மைய கட்டடத்தையும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 32. 80 லட்சத்தில் நத்தப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் பள்ளி கல்வித் துறை அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. கா. சே. சுபாஷினி, தலைஞாயிறு வட்டார ஆத்மா குழுத் தலைவா் மகா. குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி