துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

80பார்த்தது
துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள போராட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனா்.


அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த பிரசாரம் நடைபெற்றது. பேருந்து நிலையம், மேல வீதி, வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள், வணிக நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிரசுரங்களை கொடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதில் அமைப்பின் தலைவா் கே. ஆா். ஞானசேகரன், கெளரவ தலைவா் த. குழந்தைவேல், துணைத் தலைவா் ஏ. வேதரத்தினம், பொருளாளா் வி. தியகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி