இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

65பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வை. செல்வராஜ் ஆதரித்து கதிர் அறிவாள் சின்னத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர் ஆர். டி. எஸ். சரவணன், செல்வ செங்குட்டுவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி