மயிலாடுதுறையில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி துலா கட்ட பகுதியை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே இன்று காலை முதல் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களைக் கொண்டு துப்புரவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. துப்புரவு பணியாளர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கும்படி நகராட்சி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.