ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

70பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புழுக்காப்பேட்டை தெருவில் உள்ள படித்துறை அனுமார் எனும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜையில் பூர்ணா ஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

டேக்ஸ் :