மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காளஹஸ்திநாதபுரம் பேருந்து நிலையத்தில் சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் திடீரென திரும்பியதால் வழியே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி பேருந்து நிறுத்தத்திற்குள் சென்றது.
பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் சிறு காயங்களுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் தப்பினர்.