மயிலாடுதுறை: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

63பார்த்தது
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறை அடுத்த சின்னகடைவீதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பாக அனுசரிக்கப்பட்டது. மாவட்ட இணைச் செயலாளர் அறிவரசன் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி