சாலையை சீரமைக்க கோரிக்கை

76பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தொழுதாலங்குடி ஊராட்சி முதல் ஆணை மேலகரம் ஊராட்சி வரை மஞ்சள் ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 3 கிலோ மீட்டர் சாலை ஆனது தற்பொழுது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஜல்லிக்கட்டு பெயர்ந்து மிகுந்த அளவில் சேதம் அடைந்து குண்டும் குழியமாக காணப்படுகிறது.

இந்த சாலையை தான் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சாலை சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி