தரங்கம்பாடியில் மீனவர்கள் சாலை மறியல் - வீடியோ

1520பார்த்தது
தரங்கம்பாடியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இரட்டை மடிவலை, சுருக்கமடிகளை மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துவது ஆகியவற்றை தமிழக அரசு தடை செய்யக் கோரி மயிலாடுதுறை மீனவ கிராமங்கள் சார்பில் தரங்கம்பாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மறியலால் அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி