மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து நீதிமன்றத்தை புறக்கணித்து நீதிமன்ற வாயிலில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.