நேதன் லயனை பின்னுக்குத்தள்ளி அஸ்வின் சாதனை

67பார்த்தது
நேதன் லயனை பின்னுக்குத்தள்ளி அஸ்வின் சாதனை
புனேவில் நடந்துவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது வரை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இந்திய வீரர் அஸ்வின் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின்(531 விக்கெட்டுகள்), ஆஸ்திரேலியாவின் நேதன் லயனை(530) பின்னுக்குத்தள்ளி 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது தவிர WTC தொடரிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்(188) என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி