மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட காலகஸ்திநாதபுரம் ஊராட்சியில் விவசாய நிலங்களில் ஆடு, மாடுகள் கட்டுப்பாட்டை மீறி மேச்சலுக்கு விடும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து நேற்று மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் புகார் மனுவை வழங்கினர். ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டார்.