மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சட்டை மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ராஜ்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.