வைத்தீஸ்வரன் கோவிலில் ஆதீனம் சுவாமி தரிசனம்

65பார்த்தது
வைத்தீஸ்வரன் கோவிலில் ஆதீனம் சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் மண்டலபிஷேக கார்த்திகையை முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் நேற்று வருகை புரிந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். சுவாமி, அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி