புதிய கட்டிடம் கட்டப்படுமா?

67பார்த்தது
புதிய கட்டிடம் கட்டப்படுமா?
நாகை மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஏர்வாடி பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்த கட்டிடம் சுமார் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 500 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ள இந்த கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம் எந்தவித பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் மேற்கூரை, சுவர்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது. இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி