திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது

75பார்த்தது
திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜீவ்காந்தி (வயது 34) என்பவர் அந்த பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது. மேலும் இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது செய்து அவரிடம் இருந்து 400 பாட்டில்களில் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி