விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி

82பார்த்தது
விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை கிராமத்தில் காய்கறிகள் சாகுபடி செய்துள்ள விவசாய வயலில் சுற்று வட்டார விவசாயிகளை ஒரே இடத்தில் வரவழைத்து நேரடி செயல்விளக்க உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் கலந்துக் கொண்டு காய்கறி சாகுபடி முக்கியத்துவம், நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், ரசாயன உரங்கள், செயற்கை மருந்துகளின் பயன்பாடு குறைத்து இயற்கை சார்ந்த முறையில் பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படுத்த பஞ்சகாவ்யா, மீன் எண்ணெய் பயன்படுத்தவும், தாய் அந்துப் பூச்சிகள் கவர்ந்து அழிக்க மஞ்சள் வண்ண அட்டை, பூக்கள் மூலம் கவர்ந்து அழிக்க காய்கறிகள் பறக்கும் பொறி பயன்பாடுகள் மற்றும் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் காய்கறிகள் சந்தைப்படுத்தல், அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் போது மிகுந்த லாபம் கிடைக்கும் என்றார். பயிற்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குநர் சந்திரஹாசன் கலந்து கொண்டு மண் பரிசோதனை முக்கியத்துவம், காய்கறிகள் மருத்துவ குணங்கள் மற்றும் குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய காய்கறிகள் சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன் வரவேண்டும் எனவும் அரசு தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகளவில் இடுபொருள்களுக்கு மான்யம் வழங்குகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி