மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 90ஸ் கிட்ஸின் விருப்பமான சிற்றுண்டி முதல் 2கே கிட்ஸ் இன் உணவுகள் வரை மாணவர்களால் உருவாக்கப்பட்டு விற்பனை சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதனை ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டு ஆர்வமுடன் உணவுப் பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் உணவுப் பொருள்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதில் கல்லூரி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி வெங்கட்ராமன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.