கடைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் இரவில் குடிபோதையில் கடை மற்றும் கடைகளுக்கு வழியை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்டால்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி வீடுகள் மீது கற்களை தூக்கி எறிந்து அராஜகமாக செயல்பட்ட இளைஞர்களை கைது செய்யக்கோரி நிம்மேலி கடை வீதியில் இன்று ஜூலை 19 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு நேரத்தில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் நான்கு பேர் கடைவீதியில் உள்ள டீக்கடை சாலை வைக்கப்பட்டுள்ள ஸ்டால்கள் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டத்துடன் கற்களை கொண்டு தெரு விளக்குகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து நிம்மேலி கடைவீதியில் உள்ள சிமெண்ட் கடை ஒன்றின் பெயர் பலகையை உடைத்தும் வெளியில் எடுத்து வைக்கப்பட்டிருந்த ஸ்டாலை அடித்து சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் இருந்து வந்த சீர்காழி காவல்துறையினரிடம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்

தொடர்புடைய செய்தி